பெற்றோருடன் சென்ற காதலி: கள்ளக்காதலன் தற்கொலை

தாரமங்கலம்: திருமணமான வாலிபர், மற்றொரு பெண்ணை காதலித்து, இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின் போலீசார் நடத்திய பேச்சில், பெற்றோருடன் பெண் சென்றார். இதில் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தாரமங்கலம், தெசவிளக்கு, எலமக்கவுண்டனுாரை சேர்ந்தவர் தங்கராஜ், 27. இவருக்கு, உறவு பெண் ரேணுகாவுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் தங்கராஜ் அதே ஊரை சேர்ந்த கோகிலா, 20, என்பவருடன் பழகி வந்ததால், ரேணுகா கோபித்துக்கொண்டு, இரு மாதத்துக்கு முன் தாய் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் தங்கராஜ், கடந்த, 22ல், கோகிலாவுடன் சென்று விட்டார். இதனால் கோகிலாவின் தாய், 'மகளை காணவில்லை' என, தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

நேற்று முன்தினம் தங்கராஜ், கோகிலாவை கண்டுபிடித்த போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில் கோகிலா, பெற்றோருடன் செல்வதாக கூறிச்சென்றார். தங்கராஜை, அவரது பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்று, போலீசார் அறிவுரை கூறினர். ஆனால் நேற்று காலை, வீடு முன் உள்ள தறி பட்டறையில், தங்கராஜ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கராஜின் தந்தை குழந்தைகவுண்டர், 'மகன் பழகி வந்த கோகிலா, பெற்றோருடன் சென்றதால் மனமுடைந்து இறந்துவிட்டார்' என, தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement