பேனர் வைத்தவர் மீது வழக்கு

குமாரபாளையம்: குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், சில நாட்களுக்கு முன், பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்கள், அரசியல் கட்சியினர், வியாபார நிறுவனத்தார் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது இன்ஸ்பெக்டர் தவமணி, 'போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர் வைக்க கூடாது' அறிவுரை வழங்கினார். ஆனால், அதை பொருட்படுத்தாமல், குமாரபாளையம் அருகே, வேமன்காட்டுவலசு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர் வைத்த சக்திவேல், 58, என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement