இறைச்சி விற்பனை பாதிப்பு

வெண்ணந்துார்: வெண்ணந்துார் பகுதியில், 20க்கும் மேற்பட்ட கறிக்கோழி கடைகள் உள்ளன. இங்கு பிராய்லர் கோழிகள் உயிருடனும், இறைச்சியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று, ஞாயிற்றுக்கிழமை சித்திரை மாத அமாவாசை என்பதால், பெரும்பாலான வீடுகளில் அசைவம் செய்வதை தவிர்த்தனர்.

மேலும், கோடை காலம் என்பதால் வெயில் தாக்கத்தால் கறிக்கடைகளில் கூட்டம் இல்லாமல் இருந்தது. இதனால், உயிருடன், 110 ரூபாய்க்கும், இறைச்சி ஒரு கிலோ, 140 ரூபாய்க்கும் விற்பனை செய்தனர். பிராய்லர் கோழி விலை குறைந்திருந்தாலும், சித்திரை அமாவாசை என்பதால், இறைச்சி வாங்க மக்கள் கூட்டம் வராததால், பெரும்பாலான கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Advertisement