பாவை கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு தின விழா
நாமக்கல்: நாமக்கல், பாச்சலில் உள்ள பாவை கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு தின விழா நடந்தது தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை வகித்தார். சேலம் டி.எல்.சி., கார்னர் ஸ்டோன் நிறுவனத்தின் நிறுவனரும், இயக்குனருமான சங்கீதா ப்ளோரோ, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ''இன்று பணி ஆணை பெற்ற நீங்கள், தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், சவால்களும், போட்டிகளும் நிறைந்த சமூகத்தில், கற்றல் பண்பே உங்களை அடுத்த வளர்ச்சிக்கு வழிநடத்தும்,'' என்றார்.
தொடர்ந்து, பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கைநடராஜன் வாழ்த்தி பேசினார். முன்னதாக, சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கினர். பின், பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற, 4,389 மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. விழாவில், பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குனர் (நிர்வாகம்) ராமசாமி, இயக்குனர் (சேர்க்கை) வக்கீல் செந்தில், இயக்குனர் (திறன் வளர் ஆராய்ச்சி மையம்) கிருஷ்ணமூர்த்தி, வேலைவாய்ப்பு மைய அலுவலர் தாமரை செல்வன், அனைத்து கல்லுாரி முதல்வர்கள், முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!