திருமணமாகாத விரக்தி; தொழிலாளி தற்கொலை

டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த புள்ளப்பநாயக்கன்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகேந்திரன், 43; கட்டட கூலி தொழிலாளி. திருமணம் ஆகாததால் விரக்தியில் இருந்தார். மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், போதையில் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கடந்த, 26ம் தேதி வயிறு வலித்ததால், மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டதாக, வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. திருமணம் ஆகாததாலும், குடியை நிறுத்த முடியாததாலும் மன உளைச்சலில் இருந்த நாகேந்திரன், மதுவில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக, பங்களாப்புதுார் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement