கொடிவேரி, பவானிசாகரில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோபி: பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுப்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, வழக்கத்தை விட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். தடுப்பணை பகுதியிலும் தண்ணீர் கொட்டியதால், கொளுத்தும் கோடை வெயிலை விரட்டும் வகையில், வெகுநேரம் குளித்து மகிழ்ந்தனர். தடுப்பணை பகுதியில் பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர்.

* ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பொழுதுபோக்கு பூங்காவாக, பவானிசாகர் அணை பூங்காவுக்கு, குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேற்று வந்தனர். பூங்காவில் குழந்தைகள் ஊஞ்சல் ஆடியும் சறுக்குகளில் ஏறி விளையாடி குதுாகலித்தனர். படகு சவாரி சென்று மகிழ்ந்தனர். தேர்வு விடுமுறையால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, பவானிசாகர் பூங்கா களை கட்டியது.

Advertisement