மாரியம்மன் கோவிலில் மண்டபம் திறப்பு

காங்கேயம்: வெள்ளகோவில் பச்சாபாளையம் ஊராட்சி, கண்ணாபுரம் மாரியம்மன் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 15.40 லட்சம் ரூபாய் மதிப்பில், சேவார்த்திகள் இளைப்பாறும் மண்டபம் கட்டப்பட்டது. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் காங்கேயம் தாசில்தார் மோகனன், கண்ணாபுரம் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ராமநாதன், வெள்ளகோவில் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement