புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா

அந்தியூர்: அந்தியூர் அருகே நகலுாரில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு தேர்த்திருவிழா நேற்றிரவு நடந்தது. ஆலயத்தில் இருந்து மைக்கேல் அதிதுாதர், செபஸ்தியார், அந்தோனியார், வனத்துசின்னப்பர் ஆகிய சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சுமந்து சென்றனர்.

பெருமாபாளையம் ரோடு, நகலூர்-அந்தியூர் ரோடு வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதை தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் உதகை மறைமலை மாவட்ட, பங்குத்தந்தைகள் ஜோசப் அமலதாஸ், அமுல்ராஜ் தலைமையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement