அமாவாசையால் மீன் விற்பனை மந்தம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகிறது.

சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று, மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது, காவிரி ஆற்றில் குறைந்த தண்ணீர் மட்டும் செல்கிறது. இதனால் மீன்கள் குறைவாகவே வலையில் சிக்குகின்றன. நேற்று, அமாவாசை என்பதால் மீன் விற்பனை மந்த நிலையில் இருந்தது. இதில், ஜிலேபி மீன் கிலோ, 100 ரூபாய், கெண்டை மீன், 70 ரூபாய், விரால் மீன், 500 ரூபாய், பாறை, 130 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று, 300 கிலோ மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement