தொ.மு.ச., கவுன்சில் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட தொ.மு.ச., கவுன்சில் சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா, முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஓசூரில் தளி சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

தொ.மு.ச., கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார். தொ.மு.ச., பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி., கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தொ.மு.ச., தலைவர் நடராஜன், மேயர் சத்யா ஆகியோர், அமைப்புசாரா தொழிலாளர்கள், 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநில செயலாளர் செங்குட்டுவன், துணை மேயர் ஆனந்தய்யா, தொ.மு.ச., பேரவை பொருளாளர் வள்ளுவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement