ஆந்திராவில் கண்டெய்னர் லாரி, கார் மோதி கோர விபத்து; தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

திருப்பதி; ஆந்திராவில் கண்டெய்னர் லாரி, கார் மோதிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
@1brஇதுபற்றிய விவரம் வருமாறு;
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் பாகாலா பகுதியில் தோட்டப்பள்ளி என்ற இடத்தில் பூத்தலப்பட்டு, நாயுடுபேட்டை தேசிய சாலையில் முன்னால் கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பரபரப்பான சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள் அங்கு சீறி பாய்ந்தபடி சென்று கொண்டிருந்தன.
அப்போது அதே சாலையில் திருப்பதியில் இருந்து சித்தூருக்கு அதி வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றது. எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரபரப்பு மிகுந்த சாலையில் நிகழ்ந்த இந்த கொடூர விபத்தால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தகவலறிந்த போலீசாரும், உள்ளூர் மக்களும் இடிபாடுகளில் சிக்கி உள்ள உடல்களை மீட்கும் பணிகளில் இறங்கி உள்ளனர். படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பலியானவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
வாசகர் கருத்து (2)
m.arunachalam - kanchipuram,இந்தியா
28 ஏப்,2025 - 20:46 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
28 ஏப்,2025 - 19:31 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சுப்மன் கில், பட்லர் அரைசதம்: ராஜஸ்தான் அணிக்கு 210 ரன்கள் இலக்கு
-
டிரம்ப் மிரட்டலுக்கு இடையே துவங்கியது கனடா பார்லி., தேர்தல்
-
சிமென்ட் குடோனில் ரூ.8.15 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: மும்பையில் இருவர் கைது
-
பொதுக்கூட்ட மேடையில் போலீஸ் அதிகாரியை அடிக்க பாய்ந்த முதல்வர்
-
டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் இரண்டாம் சோதனை ஓட்டம் வெற்றி
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13 ல் தீர்ப்பு :கோவை மகளிர் கோர்ட்
Advertisement
Advertisement