பயங்கரவாதி ராணாவுக்கு மேலும் 12 நாட்களுக்கு என்.ஐ.ஏ., காவல் நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி: பயங்கரவாதி தஹாவூர் ராணாவுக்கு, மேலும் 12 நாட்களுக்கு என்.ஐ.ஏ., காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2008ம் ஆண்டு நவ., 26ல், மஹாராஷ்டிராவின் மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர். இந்த நாச வேலைக்கு மூளையாக செயல்பட்டவரும், வட அமெரிக்க நாடான கனடா குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசித்து வந்த பாகிஸ்தானை சேர்ந்தவருமான தஹாவூர் ராணா, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பின் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, நம் நாட்டின் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளிடம் ராணா ஒப்படைக்கப்பட்டார்.
அவரை, 18 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வந்தனர். அவனிடம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது. தஹாவூர் ராணாவின் 18 நாள் என். ஐ. ஏ., காவல் இன்றுடன் முடிந்ததும், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ராணாவை மேலும் காவலில் வைத்து விசாரணை நடத்த என். ஐ. ஏ., அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ராணாவுக்கு, மேலும் 12 நாட்களுக்கு என்.ஐ.ஏ., காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ராணாவிடம் பல உண்மை சம்பவங்களை வெளிக் கொண்டுவர என்.ஐ. ஏ., அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும்
-
பிரீமியர் லீக் போட்டி: குஜராத் அணி பேட்டிங்
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13 ல் தீர்ப்பு :கோவை மகளிர் கோர்ட்
-
சூடு பிடிக்கும் இரட்டை இலை விவகாரம்: மீண்டும் விசாரணையை தொடங்கிய தேர்தல் ஆணையம்
-
மே 3ல் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை
-
மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்பு
-
நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது!