பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13 ல் தீர்ப்பு :கோவை மகளிர் கோர்ட்

8

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே.13 ல் தீர்ப்பு அளிக்கப்படும் என்று கோவை மகளிர் கோர்ட் அறிவித்துள்ளது.


கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், 2019ல் கல்லுாரி மாணவி மற்றும் பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, 29, சபரிராஜன், 29, உட்பட ஒன்பது பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கோவை மகளிர் கோர்ட்டில், இறுதி குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது.

அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு சாட்சி விசாரணை அனைத்தும் முடிந்துள்ளன. இந்நிலையில் வரும் மே.13 ஆம் தேதி அன்று தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement