மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்பு

7

சென்னை: மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டனர். இருவரின் ராஜினாமா கடிதங்களும் ஏற்கப்பட்டதாக கவர்னர் மாளிகை தெரிவித்தது.

பொன்முடியிடம் இருந்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரம், அமைச்சர் சிவசங்கருக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

மனே தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்றார். அவர் ஏற்கனவே பால்வளத்துறை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருக்கு மீண்டும் பால்வளத்துறையே அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கவர்னர் மாளிகையில் இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் துரை முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி, மனோ தங்கராஜிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜிற்கு முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ரவி மலர்கொத்து வழங்கி வாழ்த்தினர்.

Advertisement