பொதுக்கூட்ட மேடையில் போலீஸ் அதிகாரியை அடிக்க பாய்ந்த முதல்வர்

19

பெலகாவி: கர்நாடகாவில் காங்கிரஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தின் போது காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா காவல்துறை உயரதிகாரியை அடிக்க பாய்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது முதல்வருக்கு எதிராக பா.ஜ.,வினர் கருப்பு கொடி பேரணி நடத்தினர். இவர்கள் திடீரென பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்குள் புகுந்தனர்.

இந்த விவகாரம் முதல்வரின் கவனத்திற்கு சென்றது. முதல்வர் சித்தராமையா, கடும் கோபம் அடைந்தார். போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்த உயரதிகாரி யார் என கேட்டு அவரை மேடைக்கு வரச்சொன்னார்.உடனே அங்கிருந்த ஏ.எஸ்.பி,, பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.

பொதுக்கூட்ட மைதானத்திற்குள் கருப்பு கொடியுடன் பா.ஜ.,வினர் நுழைய ஏன் அனுமதித்தாய் என கூறி அவரை கன்னத்தில் அடிக்க பாய்ந்தார். உடனே சுதாரித்த ஏ.எஸ்.பி., முதல்வரின் செயலால் அதிர்ச்சியடைந்தார்.

இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொது இடத்திற்கு முதல்வரின் செயலுக்கு பா.ஜ., மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதிகாரம் நிரந்தரமானதல்ல என்பதை நினைவில் கொண்டு நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்றனர்.

Advertisement