பொது ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

சென்னை, பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயிலில், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, 70 பயணம் செய்தார்.

ரயில் பேசின்பாலம், சென்னை சென்ட்ரல் இடையே மெதுவாக வந்தபோது, விஜயலட்சுமி அணிந்திருந்த, 6 கிராம் தங்க செயினை, வாலிபர் ஒருவர் பறித்து தப்பினார்.

இதேபோல், பாலக்காடு விரைவு ரயிலில், ஒரு பெண்ணிடம், அதே வாலிபர் நகை பறிப்பில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து, சென்ட்ரல் ரயில்வே போலீஸ் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

'சிசிடிவி'யில் பதிவான காட்சிகள் அடிப்படையில், வில்லிவாக்கம் லட்சுமிபுரத்தை சேர்ந்த குமரேசன் 30, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து பணம், தங்க செயின்கள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement