சிமென்ட் குடோனில் ரூ.8.15 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: மும்பையில் இருவர் கைது

3

மும்பை: மும்பையில் உள்ள சிமென்ட் குடோனில் இருந்து ரூ.8.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து, பதுக்கிய 2 பேரை கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு சிமென்ட் குடோனில் மெபெட்ரோன் எனப்படும் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகாரின் அடிப்படையில் அங்கு மும்பை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.8.15 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக பாந்த்ராவைச் சேர்ந்த சாதிக் சலீம் ஷேக் 28, மற்றும் மீரா சாலையில் வசிக்கும் சிராஜ் பஞ்ச்வானி 57 ஆகிய இருவரை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கடந்த வாரம் சாகினகாவில் உள்ள கஜுபாடா பகுதியில் ஷேக் என்பவர் பிடிபட்டார், அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள மெபெட்ரோன் என்ற போதைப்பொருள்கள் மீட்கப்பட்டது.

Advertisement