ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவி எலும்பு அறுவை சிகிச்சை ஆய்வகம்
சென்னை,
சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், 2.40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் ஆய்வகத்தை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணயின், நேற்று திறந்து வைத்தார். அப்போது, காது, மூக்கு, தொண்டை பிரிவு முன்னாள் இயக்குனர் முத்துக்குமார் இயற்றிய செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் கையேட்டை வெளியிட்டார்.
பின் அவர் அளித்த பேட்டி:
தமிழக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் 'காக்ளியர் இம்ப்ளான்ட்' எனும், காது வால் அறுவை சிகிச்சை, ஏற்கனவே சிறப்பாக நடக்கிறது. தற்போது, புதிய முயற்சியாக, செவி எலும்பு அறுவை சிகிச்சை ஆய்வகம் துவக்கப்பட்டுள்ளது. இதில், இ.என்.டி., சிறப்பு மருத்துவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படும். இங்கு, வளரிளம் பருவத்தினருக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சை பிரிவும் துவக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமைகளில், காலை 8:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், மனநல மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் தோல் மருத்துவம், பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று உள்ளிட்ட பல்துறை சேவைகள் வழங்கப்படும்.
இங்கு, சி.பி.சி.எல்., - நோவா நோட்ரிக்ஸ் கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட, சி.எஸ்.ஆர்., நிதியான 94 லட்சம் ரூபாயில், நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் அருண்தம்புராஜ், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன், துணை முதல்வர் கவிதா, நீரிழிவு நோயியல் துறை இயக்குனர் தர்மராஜன், காது, மூக்கு, தொண்டை நிலைய இயக்குனர் சுரேஷ்குமார், பேராசிரியர் பாரதிமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
சீர்மரபினர் நலத்திட்ட உதவி பெற சிறப்பு முகாம்
-
பிரான்மலை வடுக பைரவர் கோயிலில் ஜெயந்தன் பூஜை
-
பிரதமரின் வீடு, கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.223.69 கோடி ஒதுக்கீடு
-
'பங்கர்' குழியில் பதுங்கினாரா பாக்., ராணுவ தளபதி சையது அசிம் முனீர்.
-
மே 4 வேம்பத்துார் கலிதீர்த்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
-
ராகு, கேது பெயர்ச்சி பூஜை