பிரைம் சீனியர் ஆடவர் டென்னிஸ் பெசன்ட் நகர் ஜோடிகள் அசத்தல்

சென்னை,
பெசன்ட் நகர் கிளப், பிரைம் டென்னிஸ் மற்றும் டென்னிஸ் பிரீமியர் லீக் அமைப்பு இணைந்து, ஆடவருக்கான சீனியர் பிரிவு டென்னிஸ் போட்டியை, கடந்த 26, 27ம் தேதிகளில் நடத்தின.

போட்டிகள், பெசன்ட் நகர் கிளப் டென்னிஸ் அரங்கில் நடந்தன. இதில், 35, 45, 55 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில், தனித்தனியாக நடந்தன.

போட்டியில், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 80க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

பிரிவு வாரியாக வெற்றி பெற்றோர் விபரம்:

* 35 வயது தனிநபரில் ஸ்ரீநாத் 6 - 1 என்ற கணக்கில் சந்திரமவுலியையும்; இரட்டையரில் ஸ்ரீநாத் - அமன்ஜவஹர் ஜோடி, 6 - 3 கணக்கில், விக்ரம் - அருண் ஜோடியையும் தோற்கடித்து முதலிடத்தை தட்டிச் சென்றனர்.

* 45 வயது தனிநபரில், கார்த்திகேயன் 6 - 2 என்ற கணக்கில் சுப்பிரமணியனையும்; இரட்டைரில் விஜய்கண்ணன் - ராம்குமார் ஜோடி, 6 - 3 என்ற கணக்கில் விக்ரம் - ரங்கா ராவ் ஜோடியையும் வீழ்த்தினர்.

* 55 வயது தனிபரில் ராம்பிரசாத் ரெட்டி, 6 - 0 என்ற கணக்கில் ராமன் மகாதேவனையும்; இரட்டையரில் கார்த்திக் கைலேஷ் - ரமீஸ்சம்த் ஜோடி, 6 - 3 என்ற கணக்கில் ரவிராஜ் பண்ட்லா - ஜவஹர்லால் நேரு ஜோடியையும் வீழ்த்தி முதலிடங்களை பிடித்தனர்.

போட்டியில், தனிநபர் 35 வயது தவிர, வெற்றி பெற்றோர் அனைவரும், பெசன்ட் நகர் கிளப்பை சேர்ந்தோர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement