தேசிய ஆணழகன் போட்டி 450 வீரர்கள் பங்கேற்பு

திருவொற்றியூர்தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, தி.மு.க., பிரமுகர் சிவராமன் ஏற்பாட்டில், 'ராக் கிளாசிக் - 2025' சார்பில், தேசிய அளவிலான ஆணழகன் போட்டி, நேற்று முன்தினம் ராஜாகடை தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது.

இதில், பாண்டிசேரி, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த, 450க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.

அதன்படி, வயது மற்றும் எடை பிரிவு வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான போட்டிகளும் நடந்தன.

பங்கேற்ற அனைவரும், கோப்பை, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். சிறப்பு பரிசாக, எல்.இ.டி., தொலைக்காட்சி, மிக்சி, மின்விசிறி உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.

Advertisement