வரலாறு காணாத மின்தடையால் ஸ்தம்பித்த ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ்; ரயில், விமான சேவை முற்றிலும் நிறுத்தம்

மாட்ரிட்: ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் நாடுகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மின்தடையால் ரயில், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளன.
வழக்கத்துக்கு மாறாக ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் பிரான்ஸ் ஆகிய 3 நாட்களில் இன்று திடீர் மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடை 3 நாடுகளில் உள்ள பெரும்பாலான நகரங்களை பாதித்தது.
கிட்டத்தட்ட இந்த 3 நாடுகளிலும் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்தனர். குறிப்பாக ஸ்பெயினில் மாட்ரிட், பார்சிலோனா, செவில்லே, போர்டோ, லிஸ்பன் உள்ளிட்ட தொழில் துறை மையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மின்தடைக்கு காரணம் என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாக வில்லை. இருப்பினும் இது ஒரு சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் நாடுகளில் அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மின்தடை எதிரொலியாக ரயில், விமான சேவைகள் முற்றிலும் முடங்கியது. பல்வேறு நகரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
மேலும்
-
பணம் வைத்து சூதாட்டம் ரூ.70 ஆயிரம் பறிமுதல்
-
மே 1ல் டாஸ்மாக் விடுமுறை
-
மக்கள் குறைதீர் கூட்டம்: 434 மனுக்கள் குவிந்தன
-
ஆற்றின் புதை குழிகளில் உயிரிழப்பை தடுக்க கம்பி வேலி அமைப்பது அவசியம்
-
கல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த கோரி கலெக்டரிடம் மனு
-
கரூர் அருகே சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு