மக்கள் குறைதீர் கூட்டம்: 434 மனுக்கள் குவிந்தன
கரூர்:கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த, பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து, 434 மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன்கள், பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து, 434 மனுக்கள் வாங்கப்பட்டன.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 பயனாளிகளுக்கு, 18,221 ரூபாய் மதிப்பில் உதவி உபகரணங்களையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், இரு பயனாளிகளுக்கு தலா, 4,000 ரூபாய் மதிப்பீட்டில் திரவ எரிவாயு இலவச சலவைபெட்டி என மொத்தம், 12 பயனாளிகளுக்கு, 26 ஆயிரத்து, 221 ரூபாய்- மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், கரூர் ஆர்.டி.ஓ.,முகமது பைசல் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
மே 1ல் கிராம சபை கூட்டம்
-
மோட்டார் ரீவைண்டிங் பழுது நீக்குதல் பயிற்சிக்கு வரவேற்பு
-
அடுத்தவர் நிலத்தில் அத்துமீறி நுழைந்த தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
-
நீட் தேர்வு எழுதும் 278 அரசுப்பள்ளி மாணவர்கள்
-
77 ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., மிஷினுடன் தராசுகள் இணைப்பு மே இறுதிக்குள் அனைத்து கடைகளிலும் அமல்
-
இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் விபத்தில் காயம்