பணம் வைத்து சூதாட்டம் ரூ.70 ஆயிரம் பறிமுதல்
குளித்தலை:
குளித்தலை அடுத்த, பஞ்சப்பட்டி குளம் கரையில் பணம் வைத்து சூதாடுவதாக, டி.எஸ்.பி., செந்தில்குமாருக்கு வந்த தகவல்படி, லாலாபேட்டை போலீசார் நேற்று முன்தினம் மதியம், 1:00 மணியளவில் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர்.
அப்போது பணம் வைத்து சூதாடிய, பொம்மை கவுண்டனுார் அருள்அரசன், 40, லால்குடி திருமலமேடு சந்திரசேகரன், 47, செவந்திப்பட்டி ஜெகன் மற்றும் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதில் மூன்று நபர்களைப் பிடித்தனர். மற்றவர்கள் ஓடி விட்டனர். இவர்களிடமிருந்து, 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து மூவரை கைது செய்தனர்.
தோட்டத்தில் சாராயம்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement