கரூர் அருகே சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு

கரூர்:
கரூர் அருகே சென்று கொண்டிருந்த கார், திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், பெரிய குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காதர்கான், 60. இவரது சைலோ காரை மருமகன் நவீத் அகமத், 40, சில நாட்களுக்கு
முன், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, மெக்கானிக் ெஷட்டில் பராமரிப்பு பணிக்காக விட்டிருந்தார்.
நேற்று பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில், மெக்கானிக் ஒருவர் காரை சோதனை செய்ய, கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை ராம்நகர் பிரிவு சாலையில் ஓட்டிக்கொண்டு சென்றார். அப்போது, காரின் முன்பக்க பகுதி புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு வீரர்கள் சென்று, போராடி தீயை அணைத்தனர். ஆனால், காரின் முன் பகுதி மட்டும் எரிந்து நாசமானது.
பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, கார் தீப்பிடித்து எரிந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இதனால், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement