ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: பைனலில் குஷி சந்த்

அம்மான்: ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை பைனலுக்கு குஷி சந்த், தேவன்ஷ் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் முன்னேறினர்.
ஜோர்டானில், 15, 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. நேற்று, 17 வயதுக்குட்பட்டோருக்கான அரையிறுதி போட்டிகள் நடந்தன.

பெண்களுக்கான 46 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் குஷி சந்த், உக்ரைனின் ஒலெக்சாண்ட்ரா செரெவாடா மோதினர். இதில் குஷி சந்த் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான மற்ற எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர் (60 கிலோ), ஹர்சிகா (63 கிலோ), ஜன்னத் (54 கிலோ), அன்ஷிகா (81+ கிலோ) வெற்றி பெற்றனர்.

மற்ற அரையிறுதியில் இந்தியாவின் ஜியா (48 கிலோ), பிராச்சி (66 கிலோ), ஹிமான்ஷி (70 கிலோ), சான்வி (75 கிலோ), பிராச்சி காட்ரி (80 கிலோ) தோல்வியடைந்தனர்.

ஆண்களுக்கான 80 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தேவன்ஷ் 4-1 என வியட்நாமின் டிராங் டியனை வென்றார். மற்ற போட்டிகளில் அமன் தேவ் (50 கிலோ), திகம் சிங் (52 கிலோ), உதம் சிங் ராகவ் (54 கிலோ), ராகுல் காரியா (57 கிலோ), அமன் சிவாச் (63 கிலோ) தோல்வியடைந்தனர்.
இத்தொடரில் 21 இந்திய நட்சத்திரங்கள் (15, 17 வயது) பைனலுக்கு முன்னேறினர்.

Advertisement