27 பேட்டரிகளுடன் 'பலே' திருடன் கைது

கொடுங்கையூர்,
கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன், 36; ஆட்டோ டிரைவர். கடந்த 26ம் தேதி, இவரது ஆட்டோவில் இருந்த பேட்டரியை, மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது.

கொடுங்கையூர்போலீசார் விசாரித்தனர்.

இதில், வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஸ்டாலின், 34, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவரை நேற்று கைது செய்த போலீசார், 27 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

திருட்டு



வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மேகவர்ணன், 40, என்பவரது ஆட்டோவில் இருந்தும், வியாசர்பாடி, நேரு நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஜெகதீஷ் என்பவரது ஆட்டோவில் இருந்த பேட்டரியும், நேற்று முன்தினம் இரவு திருட்டு போயின.

இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement