திருப்போரூர் கிளை நுாலகத்தை முழுநேர நுாலகமாக்க கோரிக்கை
திருப்போரூர், திருப்போரூர் கிளை நுாலகத்தை, முழு நேர நுாலகமாக தரம் உயர்த்த வேண்டுமென, வாசகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்போரூர் கிளை நுாலகம், 1959ல் துவக்கப்பட்டது.
இதில், 3,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். 30,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
மாணவர்கள், பொதுமக்கள் என, தினமும் 100க்கும் மேற்பட்டோர் வந்து படிக்கின்றனர்.
காலை, 9:00 முதல் மதியம், 12:30 மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை இயங்குகிறது.
கடந்த 2012ம் ஆண்டு திருப்போரூர் தாலுகாவாக மாற்றப்பட்டு, தற்போது 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆனால், இந்த நுாலகம் இன்னும் கிளை நுாலகமாகவே செயல்பட்டு வருகிறது.
எனவே, திருப்போரூர் கிளை நுாலகத்தை, முழு நேர நுாலகமாக தரம் உயர்த்த வேண்டும் என, வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து வாசகர்கள் கூறியதாவது:
திருப்போரூர் கிளை நுாலகத்தை தரம் உயர்த்தினால், காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும்.
கூடுதலாக நுாலகர்கள் நியமிக்கப்படுவர்.
செய்தித்தாள், புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மாணவர்கள் மற்றும் வேலை தேடுவோர் உள்ளிட்டோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது கோடை விடுமுறையால், மாணவர்கள் வந்து படிக்க ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
தமிழகத்திற்கான நிதியை பெற்று தாருங்கள்; வானதியிடம் முதல்வர் வலியுறுத்தல்
-
போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய சித்தராமையா
-
மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்
-
7 பேர் பலியான விபத்து நடந்தது எப்படி?
-
நாளை கூடுதல் டோக்கன் பதிவுத்துறை தகவல்
-
பொய் பரப்பிய பாக்., யு டியூப் சேனல்கள்... முடக்கம்! மத்திய அரசு எடுத்த அடுத்த அதிரடி