நாளை கூடுதல் டோக்கன் பதிவுத்துறை தகவல்
சென்னை : 'முகூர்த்த நாளான நாளை சார் - பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்கப்படும்' என, பதிவுத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள, பொது மக்கள் விரும்புகின்றனர். இதனால், முகூர்த்த நாட்களில் அதிக எண்ணிக்கையில், பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும் என்று தெரிகிறது.
எனவே, சித்திரை மாத கடைசி முகூர்த்த நாளான நாளை, சார் - பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக தினசரி, 100 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் அலுவலகங்களில், 150 டோக்கன்கள்; வழக்கமாக, 200 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெங்களூரில் போலீஸ் 'ரெய்டு' 853 பேர் மீது பாய்ந்தது வழக்கு
-
பெங்களூரு - மதுரை சிறப்பு ரயில் இயக்கம்
-
மெட்ரோ ரயிலில் சாப்பிட்ட பெண்ணுக்கு ரூ.500 அபராதம்
-
ரயில்வே நர்சிங் கண்காணிப்பாளர் தேர்வு தாலி, பூணுால் அகற்ற சோமண்ணா தடை
-
கொள்ளையடிச்சது அவங்க! பழிசொல்லும், அபராதமும் எங்களுக்கா... கனிமவள விவகாரத்தில் விவசாயிகள் கேள்வி
-
விசாரணை முடிந்ததால் ஜாமின் ரத்து செய்தது ஐகோர்ட்
Advertisement
Advertisement