செலக்கரச்சல் கிராமத்தில் புதிய நுாலக கட்டடம் திறப்பு

சூலுார்,; செலக்கரச்சல் கிராமத்தில் கிளை நூலகத்தில் கூடுதல் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செலக்கரச்சல் கிராமத்தில் உள்ள கிளை நூலகம் செயல்படுகிறது.

இங்கு கூடுதல் கட்டடம் கட்ட, மத்திய அரசு சார்பில், மாநில அரசுக்கான சிறப்பு உதவி திட்டத்தின் கீழ், 22 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக கூடுதல் கட்டடம் கட்டும் பணி துவங்கியது. பணிகள் நிறைவடைந்ததால், துணை முதல்வர் உதயநிதி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

முக்கிய பிரமுகர்கள், நூலகத்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். புதிய நூலக கட்டடம் திறக்கப்பட்டதால், வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement