தேர்வுக்கு பணம் தர மறுப்பு வாலிபர் தற்கொலை

திருபுவனை: புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள சகடப்பட்டு பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்-தேவி தம்பதியரின் மூத்த மகன் முத்துவேல் 24; இவர் அரசு போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த 22ம் தேதி தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். தற்போது பணம் இல்லை என அவர் கூறியதால் மனமுடைந்த முத்துவேல் அன்று பகல் 1;00 மணிக்கு வீட்டில் இருந்த எலி மருந்தினை சாப்பிட்டுள்ளார்.

மயங்கி விழுந்த முத்துவேலுவை அவரது குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2.15 மணிக்கு முத்துவேல் பரிதாபமாக இறந்தார். புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement