தி.மு.க.,உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால், தொகுதி செயலாளர் சக்திவேல் ஏற்பாட்டில், இல்லம்தேடி மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது.

மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா இல்லங்கள் தோறும் சென்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை , புதுச்சேரியில் தி.மு.க., ஆட்சி அமைந்தால் கொண்டுவரப்படும் என உறுதியளித்து, உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி துவக்கிவைத்தார். இதில் 100க்கும் மாணவர்கள் ஆர்வமுடன் தங்களை தி.மு.க., மாணவர் அணியில் சேர்ந்தனர். .

நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், அரியாங்குப்பம் தொகுதி செயலாளர் சீதாராமன், அவைத்தலைவர் ஆதிநாராயணன், பிரதிநிதி பொன்னுசாமி, பொருளாளர் சசிக்குமார், வர்த்தகர் அணி துணைத் தலைவர் குரு, இளைஞர் அணி துணை அமைப்பாளர் தாமரை உள்ளிட்டதி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement