கோரிமேடு பகுதியில் குடிநீர் விநியோகம் 'கட்'
புதுச்சேரி: கோரிமேடு குடிநீர் பிரிவுக்குட்பட்ட தனகோடி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 1ம் தேதியில் இருந்து, மதிய வேளையில் குடிநீர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கூறியுள்ள செய்திகுறிப்பில்,
கோரிமேடு குடிநீர் பிரிவுக்குட்பட்ட தனகோடி நகர், தர்மாபுரி, சாணரப்பேட்டை, பகுதியில் உள்ள பழைய மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து, பழைய குடிநீர் இணைப்புகளின் மூலம், தனக்கோடி நகர், தர்மாபுரி, லெனின் வீதி, சபரி நகர், புரட்சி தலைவி நகர், கலைவாணர் நகர், முத்திரையர்பாளையம், மேட்டுப்பாளையம், கலைமகள் நகர், சாணரப்பேட்டை பகுதிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த பகுதிகளில், புதிய இணைப்பு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட இருப்பதால், வரும் 1ம் தேதியில் இருந்து மதிய வேளை குடிநீர் சப்ளை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
மேலும், முத்திரைப்பாளையத்தில் உள்ள புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டில் இருந்து குடிநீர் வழங்கபட இருப்பதால், இதுவரை, புதிய குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி கொள்ளாதவர்கள், தக்க ஆவணங்கள் சமர்ப்பித்து, புதிய இணைப்பை பெறலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
-
7 பேர் பலியான கார்கள் விபத்தில் நடந்தது என்ன
-
கம்பி வேலியில் சிக்கிய புள்ளி மான் உயிரிழப்பு