கொம்மாத்தம்மன் கோவிலில் நாளை சித்திரை திருவிழா

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, மேல்பொடவூர் கிராமத்தில், கொம்மாத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

நடப்பாண்டிற்கான சித்திரை திருவிழா, நாளை, வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு, காலை 8:30 மணிக்கு, பால்குடம் ஊர்வலமும், பகல் 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் மற்றும் அன்னதானமும் நடைபெற உள்ளது.

மாலை 5:00 மணிக்கு ஊரணி பொங்கல் மற்றும் இரவு 7:00 மணி அளவில் மலர் அலங்காரத்தில் கொம்மாத்தம்மன் வீதியுலா நடைபெற உள்ளது.

Advertisement