அரசு பள்ளியில் உடற்கல்வி  இயக்குநர் நியமிக்க பெற்றோர்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம்:தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். கூடுதலாக மாணவர்கள் அமரும் வகையில் இருக்கை (பெஞ்ச்) வசதி செய்துதர வேண்டும் என வலியுறுத்தினர்.

தங்கச்சி மடம் அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மாணவர்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், பள்ளியில் 370 மாணவிகள் உட்பட 1000 பேர் படிக்கின்றனர்.

விளையாட்டில் திறமையுள்ள மாணவர்கள் இருந்தும் உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர்கள் இல்லாததால் திறமையை வெளிக்காட்ட இயலாத நிலை உள்ளது. எனவே வரும் கல்வி ஆண்டிலாவது உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் போதிய இருக்கை வசதியின்றி மாணவர்கள் பலர் தரையில் அமர்ந்து படிக்கின்றனர்.

எனவே கூடுதலாக இருக்கை வசதி செய்துதர வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement