பெட்ரோல் குண்டு வீசிய வாலிபருக்கு குண்டாஸ்

விழுப்புரம்: விழுப்புரத்தில் மொபைல் சர்வீஸ் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் அருண்குமார்,23; இவர், கடந்த மார்ச் 28 ம் தேதி விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் உள்ள மொபைல் சர்வீஸ் கடையில் தகராறு செய்து பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தார். டவுன் போலீசார் அருண்குமாரை கைது செய்து, கடலுார் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

அருண்குமார் மீது வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்தால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் அருண்குமாரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்திற்கான ஆணையை கடலுார் மத்திய சிறையில் வழங்கினர்.

Advertisement