தொழிலாளி தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் அருகே மேலமேடு கிராமத்தை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி,70; கூலி தொழிலாளி. இவர், கடந்த இரு மாதங்களாக புற்றுநோயால் சிரமப்பட்டு வந்தார்.

இதனால் மனமுடைந்த தட்சணாமூர்த்தி கடந்த 22ம் தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்தார்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தட்சிணாமூர்த்தி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement