சூதாடிய 6 பேர் கைது
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அருகே சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கண்டாச்சிபுரம் அடுத்த ஒடுவன்குப்பம் சுடுகாட்டுப் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை பிடித்தனர்.
விசாரணையில், ஒடுவன்குப்பம் பிராங்களின், 28; ஏழுமலை, 57; சுந்தர்ராஜ், 44; விஜயகுமார், 53; முருகன், 42; செல்வராஜ், 36; என தெரியவந்தது. 6 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement