மதுபானம் கடத்திய வாலிபர் கைது

வானூர்: புதுச்சேரியில் இருந்து செய்யாறுக்கு மதுபாட்டில்கள் கடத்திய வாலிபரை கைது செய்து, 236 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் திண்டிவனம் சாலை தைலாபுரம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர்.திண்டிவனம் நோக்கி பைக்கில் சென்ற நபரை பிடித்து சோதனை செய்தனர். பைக்கில் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது.

விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அன்னபத்தூர் பகுதியை சேர்ந்த கன்னியப்பன் மகன் வெங்கடேசன், 30; என தெரியவந்தது.

வெங்கடேசனை கைது செய்து, 236 மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.

Advertisement