விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டட பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தல்
கம்பம்: பெரியகுளம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனைகளில் ரூ.16 கோடியில் கட்டப்பட்டு வரும் விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டட பணிகள் 2 ஆண்டுகளை கடந்தும் நிறைவு பெறாமல் உள்ளது.
வாகன பெருக்கம், போக்குவரத்திற்கு ஏற்ற சாலைகள் இருப்பதால், தினம் தினம் விபத்துகள் நடந்து வருகிறது.பைபாஸ் சாலைகள் பயன்பாட்டிற்கு வந்த பின் விபத்துகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சையளிக்க அவசர சிகிச்சை பிரிவு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே உள்ளது. போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் அரசு மருத்துவமனையிலும் அந்த வசதி இல்லை.
அந்த குறையை போக்க 2023 ஏப்ரலில் பெரியகுளம் மாவட்ட மருத்துவமனையில் ரூ.12 கோடியிலும், உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு அமைக்க அரசு அனுமதி வழங்கியது.
விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டடங்கள் கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.
கம்பத்தில் ரூ.10 கோடியில் பிரசவ மேம்பாட்டு கட்டட கட்டுமான பணிகள் துவங்கி 2 ஆண்டுகளாகிறது. இந்த கட்டுமான பணிகள் இன்னும் நிறைவுபெறாமல் உள்ளது. எனவே கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
ஏரி, அணைகளில் வரையறையின்றி மண் அள்ளுவது தடுக்கப்படுமா? மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை தேவை
-
குறைகேட்பு கூட்டம் 432 மனுக்கள் குவிந்தன
-
சித்தலுார் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
-
தர்பூசணியில் செயற்கை நிறமிகள் இல்லை; தோட்டக்கலை துறையினர் தகவல்
-
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மோசமான நாடு; ஐ.நா.,வில் பாகிஸ்தானுக்கு இந்தியா 'குட்டு'
-
லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது