மதுரை சித்திரை திருவிழா இன்று துவக்கம்


மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள், சுவாமி சன்னிதி முன் கொடியேற்றம் நடக்கிறது.
திருவிழா நாட்களில், தினமும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில், காலை, மாலை வீதி உலா வருகின்றனர். மே 6 முதல் முக்கிய நிகழ்வாக, மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் நடக்கிறது. மே 7 திக்குவிஜயத்தை தொடர்ந்து, மே 8 காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. மே 9 மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மே 10 தீர்த்தவாரி உற்சவத்துடன், மீனாட்சி அம்மன் கோவில் நிகழ்வுகள் நிறைவுபெறுகின்றன.


இதன் தொடர்ச்சியாக, மே 11 கள்ளழகர் எதிர்சேவை, மே 12ல் ஆற்றில் சுவாமி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

Advertisement