தி.கோடு அறிவுசார் மையத்தில் குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி


திருச்செங்கோடு:
திருச்செங்கோடு நகராட்சி, சந்தைப்பேட்டையில் நகராட்சி சார்பில், கடந்தாண்டு அறிவு
சார் மையம் திறந்து வைக்கப்பட்டது.
அறிவுசார் மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2ஏ, குரூப்-4, யு.பி.எஸ்.சி., தேர்வுகள் போன்ற பல்வேறு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக நடந்து வருகிறது. வரும் ஜூலை மாதம் நடக்க உள்ள குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பை, திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு துவக்கி வைத்தார்.
சைலேந்திரபாபு ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் முருகன், மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். திருச்செங்கோடு அறிவுசார் மையத்தில் பயிற்சிபெற்ற, 18 பேர் பல்வேறு தேர்வுகளில் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement