அந்தியூர் ஸ்டூடியோவில் திருடிய கேரள கேமரா களவாணி கைது

அந்தியூர்:
அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவில் எதிரில் உள்ள, ஒரு போட்டோ ஸ்டுடியோவில், கடந்த, 14ம் தேதி இரவு, பூட்டை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமி, கேமரா, ஹார்டு டிஸ்க்கை திருடி சென்றார். ஸ்டுடியோ உரிமையாளர் கவுதம் புகாரின் அடிப்படையில், அந்தியூர் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஸ்டூடியோவில் திருடிய, கேரள மாநிலம் பாலக்காடு, புலிச்சேரி பகுதியை சேர்ந்த முபாரக் அலி, 50, என்பவரை கைது செய்துள்ளனர்.
எலக்ட்ரானிக் பொருட்களை மட்டுமே குறிவைத்து திருடும் இவர் மீது, கேரளாவில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், 40க்கும் மேற்பட்ட வழக்கு உள்ளது. பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Advertisement