பணியாளர்கள் போராட்டம்

மேலுார்; மேலுார் நகராட்சியில் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த பணியாளர்கள் 40 பேர் டெங்கு ஒழிப்பு பணியில் 8 ஆண்டுகளாக பணிபுரிகின்றனர்.

நாளொன்றுக்கு ரூ. 210 வீதம் சம்பளம் வழங்கப்பட்டது. வருங்கால வைப்பு நிதி மற்றும் மார்ச் மாத சம்பளம் வழங்காததை கண்டித்து நேற்று வேலை புறக்கணிப்பு செய்து நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொறியாளர் முத்துக்குமார் உடனடியாக சம்பளம் வழங்கினார். வருங்கால வைப்பு நிதியை ஓரிரு நாளில் வரவு வைப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement