வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலி மர்ம விலங்கு கடித்து மாடு காயம்


பவானி:ஈரோடு அருகே கதிரம்பட்டி, பாலாஜி நகரை சேர்ந்தவர் தங்கவேலு. அதே பகுதியில் பவளத்தாம்பாளையம் பகுதியில், நிலத்தை குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வருகிறார்.

பட்டி அமைத்து ஆடுகளும் வளர்க்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில், வெறிநாய் உட்பட மர்ம விலங்குகள் பட்டிக்குள் புகுந்து கடித்துள்ளன. இதில் நான்கு ஆடுகள் பலியாகி விட்டன. ஒரு ஆடு உயிருக்கு போராடி வருகிறது. இதுபற்றி வருவாய் துறையினர், ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

* தாளவாடி அருகே முதியனுார் கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரபு. இவர் தனது தோட்டத்தில், மாடு வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மர்ம விலங்கு, ஒரு மாட்டை கழுத்தில் கடித்துள்ளது. வலியால் மாடு சத்தமிடவே ஓடிச்சென்று பார்த்த நிலையில், மர்ம விலங்கு ஓடி விட்டது. சிறுத்தையா, புலியா என்பது தெரியாமல், விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

Advertisement