கலெக்டர் அலுவலக பால பணிகள் விறுவிறு

விருதுநகர்: விருதுநகர் மக்களின் நீண்ட கால கோரிக்கையான கலெக்டர் அலுவலக பாலப்பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கலெக்டர் அலுவலக பாலம் கட்ட 2021ல் மண் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 3 ஆண்டுகளாக வடிவமைப்பு, உயரம் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் 2024ல் நிதி ஒதுக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் பணிகள் துவங்காமலே இருந்தது. இந்நிலையில் ஜன. 3ல் நான்கு வழிச்சாலையில் மருந்து கோடவுன் எதிரே சென்டர் மீடியனில் வைத்து புதிய கலெக்டர் அலுவலக பாலத்திற்கான பூமி பூஜை போடப்பட்டது.
அதற்கு பின் சர்வீஸ் ரோடுகளில் வடிகால்கள் பதிக்கும் பணி நடந்தது. பாலம் அமைக்கும் பணி மார்ச் முதல் முழுவீச்சில் துவங்கியது. இப்பாலம் மருந்து கோடவுனில் துவங்கி ஆயுதப்படை வரை 700 மீட்டர் முதல் 800 மீட்டர் நீளம் வரை அமைகிறது. இதன் உயரம் 5.5 மீட்டர் ஆகும். தற்போது பணிகளுக்காக போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் மக்கள், நான்கு வழிச்சாலை வாகனங்கள் இடையேயான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு பிறந்துள்ளதால் மகிழ்ச்சியே அடைந்துள்ளனர். 10 மாதத்திற்குள் பணிகள் முடியும் என நகாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
அமைச்சரவை மாற்றத்தில் இந்த முறையும் கள்ளக்குறிச்சி மாவட்டம் புறக்கணிப்பு; தலைமை மீது தி.மு.க.,வினர் அதிருப்தி
-
குவா... குவா... சத்தம் கேட்டால் போதும் ரூபா... ரூபா... என அடம் பிடிக்கும் ஊழியர்கள்
-
ஏரி, அணைகளில் வரையறையின்றி மண் அள்ளுவது தடுக்கப்படுமா? மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை தேவை
-
குறைகேட்பு கூட்டம் 432 மனுக்கள் குவிந்தன
-
சித்தலுார் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
-
தர்பூசணியில் செயற்கை நிறமிகள் இல்லை; தோட்டக்கலை துறையினர் தகவல்