ஆர்ப்பாட்டம்

சாத்துார்: வெம்பக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு காமராஜர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம ்சார்பில் கட்டுமான மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மகாலட்சுமி, சி.டபிள்யு.எப்.ஐ. மாவட்ட செயலாளர் ராமர், சி.டபிள்யு.எப்.ஐ. ஒன்றிய செயலாளர் பெரிய சர்க்கரை. சங்கர் ராஜ் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement