உள்ளூர் வர்த்தக செய்திகள்



* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 42,803 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 46.10 முதல், 65.09 ரூபாய் வரை, 14,607 கிலோ தேங்காய், எட்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

* அந்தியூரில் நேற்று நடந்த வெற்றிலை சந்தைக்கு, 80 கூடை வெற்றிலை வரத்தானது. ராசி ராகம் சிறியது ஒரு கட்டு, 15 ரூபாய்; பெரிய கட்டு, 45-50 ரூபாய்; பீடா வெற்றிலை ஒரு கட்டு, 30-40 ரூபாய், செங்காம்பு வெற்றிலை ஒரு கட்டு, 5-௧5 ரூபாய்க்கும் விற்பனையானது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 7,280 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 40-62 ரூபாய்க்கு விற்றது. தேங்காய் பருப்பு, 16 மூட்டை வரத்தாகி, கிலோ, 160-176 ரூபாய்; எள், 14 மூட்டை வரத்தாகி, கிலோ 110-136 ரூபாய்; மக்காச்சோளம், 18 மூட்டை வரத்தாகி, கிலோ 24 ரூபாய்; இரண்டு மூட்டை துவரை வரத்தாகி கிலோ, 46 ரூபாய்; ஒரு மூட்டை பச்சைப்பயறு வரத்தாகி கிலோ, 66 ரூபாய்க்கும் விற்றது.
* கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 8,023 காய் வரத்தாகி ஒரு கிலோ, 31.89 முதல் 65.60 ரூபாய்க்கு விற்றது. இதேபோல் கொப்பரை தேங்காய் ஏலத்துக்கு, 197 மூட்டை வரத்தானது. முதல் தரம் கிலோ, 175.09 முதல், 180.19 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 120.19 முதல், 17௪ ரூபாய் வரை விற்றது. எள் ஏலத்துக்கு, 475 மூட்டை வந்தது. கருப்பு எள் கிலோ, 110-171 ரூபாய்; சிவப்பு ரக எள், 10௬-137 ரூபாய்; வெள்ளை ரகம், 10௩-119 ரூபாய் வரை விற்றது.
* கோபி தாலுகா சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 100 கிலோ வரத்தாகி ஒரு கிலோ, 130 ரூபாய்; பனங்கருப்பட்டி, 600 கிலோ வரத்தாகி கிலோ, 160 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் தென்னங்கருப்பட்டி அதே விலைக்கு விற்றது. பனங்கருப்பட்டி கிலோவுக்கு இரண்டு ரூபாய் குறைந்தது.

Advertisement