நீதிபதிகள் பணியிட மாற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் 77 மாவட்ட நீதிபதிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள், கோவை போக்சோ நீதிமன்றத்திற்கும், விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமானந்தகுமார், திண்டிவனம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கும்,

சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற கூடுதல் நீதிபதி அங்காள ஈஸ்வரி விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கும், சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஆபிரகாம் லிங்கோன் ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்ற மன்றத்திற்கும்,தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட நீதிபதி மணி, ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement