ஆண்டாள் கோயிலில் உண்டியல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நேற்று காலை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடந்தது.

விருதுநகர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையாளர் நாகராஜன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கண்காணிப்பாளர் ஆவுடையம்மாள், ஆய்வாளர் முத்து மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.

17 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணபட்ட நிலையில் ரூ. 11 லட்சத்து 28 ஆயிரத்து 797 ரொக்க பணமும், 38 கிராம் தங்கமும், 275 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வரப்பட்டிருந்தது. மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஒரு யூரோ, 3 டாலர் நோட்டுகளும் இருந்தது.

Advertisement