அரசு மருத்துவமனையில் மாதக்கணக்கில் பூட்டிக்கிடக்கும் பொதுக்கழிப்பறை

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பொதுக் கழிப்பறைகள் பல மாதங்களாக பூட்டப்பட்டுள்ளதால் அவசரத்திற்கு ஒதுங்க இடமின்றி மக்கள் தவிக்கின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே பொதுக் கழிப்பறைகள் உள்ளன. ஆனால் யாரும் உபயோகப்படுத்த முடியாதபடி மாதக்கணக்கில் பூட்டப்பட்டு காட்சிப் பொருளாகவே உள்ளது.
இதனால் புறநோயாளிகள், உடன் வருபவர்கள், மருத்துவமனை சலவைப் பணியாளர்கள், பிரேத பரிசோதனையின் போது காத்திருக்கும் உறவினர்கள் குறிப்பாக பெண்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் நிலையுள்ளது. இதனால் அவர்கள் இரண்டு கழிப்பறைகளுக்கு நடுவே உள்ள திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் நிலையுள்ளது.
மருத்துவமனை கட்டடத்தின் தரை தளத்தில் பார்க்கிங் பகுதியில் உள்ள கழிப்பறைகளும் பூட்டப்பட்டு கிடக்கின்றன. சாவி உள்ளவர்கள் திறந்து, உபயோகப்படுத்தியபின் வேறு யாரும் உபயோகிக்க முடியாதவாறு மீண்டும் பூட்டிச் செல்கின்றனர். முதல் தளத்திலும் ஒருபுறம் மட்டுமே கழிப்பறைகள் திறந்துள்ளன. மறுபக்கம் பூட்டப்பட்டுள்ளது. இதனால் அவசரத்திற்கு ஒதுங்க முதல் தளம் வரை வரவேண்டியுள்ளது.
பொதுக் கழிப்பறை திறக்கப்பட்டால் இலவசமாக தண்ணீர் கிடைக்கிறது என நோயாளிகள் அன்றி வெளியாட்கள் உபயோகப்படுத்திச் செல்கின்றனர். சில சமூக விரோதிகள் கழிப்பறைகளில் உள்ள மின்விளக்குகள், பைப்களை உடைத்தும், வாளிகளை திருடியும் செல்வதால் பூட்டப்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
-
7 பேர் பலியான கார்கள் விபத்தில் நடந்தது என்ன
-
கம்பி வேலியில் சிக்கிய புள்ளி மான் உயிரிழப்பு